25 நவம்பர் 2016

மாவீரர் நாளின் மகத்துவம் உணர்வோம் 1


வரலாறு  விடுதலையைப்பெற்றுத்தருமா?

மாவீரர் நாளெனில் மௌனமாயிருப்பதும் இழந்தைவைகள் குறித்து கவிதை எழுதி தானும் மாவீரர் நாளை கொண்டாடுவதாய் காட்டிக்கொள்வதும் தான் நிஜமான தேசப்பற்று என நினைக்கும் சமுகத்தில் வாழ்கின்றோம், 

1983 ல் என்ன நடந்து மக்கள் புலம்பெயர ஆரம்பித்தார்கள்.1990 களில் என்ன நடந்தது? அதனால் எத்துணை பாதிப்பு அடைந்தோம்? நாம் இழந்தைவை என்ன? எதற்கான இந்தபோராட்டம்? உயிரிழப்புக்கள்? இன்றைக்கு நாம் செல்லும் பாதை என்ன?

சிந்திக்க வேண்டிய காலமும் இதுவென புரியாதோராய் இருக்கின்றோம்.  

நான் அறிந்த பலருக்கு அதாவது ஈழ யுத்தம் எனில் 2009 ல் நடந்த முள்ளிவாய்க்கால்,முல்லைத்தீவு தான் தெரிந்திருக்கின்றது. அந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் , மீதி எல்லோரும் சொகுசு வாசிகள். இப்படித்தான் இன்றைய பெரும்பாலான இளம் தலைமுறையில் ஒரு குருப் சிந்திக்கின்றது. 

அதற்கு முன் என்ன நடந்தது? ஏன் நடந்தது என கேட்டால் அப்படியா தெரியாதே என சொல்லிக்கொண்டு இன்னொரு பகுதி தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் செல்கின்றது..

அதிலும் 90 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்த பலருக்கு எமது   போராட்டத்தின் ஆரம்பமும் வளர்ச்சியும் தெரியவே இல்லை. இதில் எந்த வரலாறு நம்மை விடுதலை செய்யும்? 

இதற்கு தீர்வு என்ன? 

இன்னும் வரும்!

2 கருத்துகள்:

  1. அதிலும் 90 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்த பலருக்கு எமது போராட்டத்தின் ஆரம்பமும் வளர்ச்சியும் தெரியவே இல்லை. இதில் எந்த வரலாறு நம்மை விடுதலை செய்யும்

    இது நிதர்சனம்...

    எந்த உண்மையும் தெரியாமல் இன்று பேசுபவர்கள் பலர்.
    உண்மையான நிகழ்வுகளை வளரும் தலைமுறைக்குச் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு தொடக்கம் நிஷா சகோ/ தோழி எழுதுங்கள் அறிந்திருந்தாலும் தங்கள் வழி அறிய தொடர்கின்றோம்..

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!